
வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகளுக்காக மேலும் 02 குழுக்களை குற்றப் புலனாய்வு திணைக்களம் நியமித்துள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பான தொலைபேசி உரையாடல்களின் பகுப்பாய்வு மற்றும் சட்ட வைத்திய விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தொழில்நுட்ப சேவைப் பிரிவின் 02 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.