
ரஷ்யாவிற்கு எதிரான தாக்குதல்களை நடத்துவதற்கு விமானங்களை வழங்கி ஆதரவளிக்குமாறு நட்பு நாடுகளிடம் உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ள பின்னணியில் அமெரிக்காவுக்கு சொந்தமான F-16 போர் விமானங்களை உக்ரைனுக்கு அனுப்ப அதிபர் ஜோ பைடன் மறுத்துவிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும்,உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸ்லென்ஸ்கி விடுத்த கோரிக்கை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதியிடம் செய்தியாளர்கள் கேட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் கேட்டபோது உக்ரைனுக்கு தனது நாட்டுக்கு சொந்தமான எஃப்-16 போர் விமானங்கள் வழங்கப்பட முடியாது என அமெரிக்கா அதிபர் பதிலளித்துள்ளார்.
இதன்படி, ஜேர்மனியும் உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க மறுத்த பின்னணியில் உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க அமெரிக்கா ஜனாதிபதியும் மறுத்துள்ளார்.