
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் 75வது தேசிய சுதந்திர தின விழாவை நடத்துவது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்ற நிலையில் சுதந்திர தினவிழாவை புறக்கணிக்கப் போவதாக சமகி ஜனபலவேகவையினுடைய தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க கருத்து வெளியிட்டுள்ளார்.
மேலும், இந்த ஆண்டு தேசிய சுதந்திர விழாவை புறக்கணிக்க சுதந்திர ஜனதா சபையும் முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத்.தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இவ்வருட சுதந்திரக் கொண்டாட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.