
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட 03 வழக்குகளில் இருந்து பிணை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பிரேரணைகள் முன்வைக்கப்பட்ட பின்னர் இன்று மீண்டும் இந்த வழக்குகள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்தோடு, கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாகவும், கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாகவும் நடத்தப்பட்ட போராட்டம் மற்றும் ஜூலை 09 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றில் வசந்த முதலிகேவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த 03 வழக்குகளுக்கும் தலா 05 இலட்சம் ரூபா பெறுமதியான 02 பிணை நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளரை அந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.