
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
மேலும், இலங்கைக்கு ஆதரவளித்த நுலாந்திற்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளதோடு இலங்கையின் பொருளாதாரம் மீளும் வரை மேலதிக ஆதரவை வழங்குவதற்கு நுலாண்ட் தனது உடன்பாட்டை வெளிப்படுத்தியிருகின்றார்.