2022ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைகளுக்காக சுமார் 3 இலட்சம் பேர் சென்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, 2022ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைக்காக வெளியேறியவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டு லட்சத்து 99,934 ஆகும். இவர்களில் ஒரு லட்சத்து ஆயிரத்து 786 பேர் தொழில் திறமையற்ற தொழிலாளர்களாக வெளிநாட்டு வேலைக்குச் சென்றுள்ளனர்.
மேலும், தொழில் திறமைகொண்ட தொழிலாளர்களாக 88,215 பேரும், வீட்டுப் பணியாளர்களாக 73,781 பேரும் வெளிநாட்டு வேலைக்குச் சென்றுள்ளனர். அவர்களில், 2022 டிசம்பர் மாதத்தில் 23,407 பேர் வெளியேறியுள்ளனர்.
இதற்கிடையில், 2022 இன் பிற்பகுதியில் குறிப்பிடத்தக்க மீட்சியைக் காட்டினாலும், 2022 ஆம் ஆண்டு முழுவதும் வெளிநாட்டு ஊழியர்களின் பணம் அனுப்பும் விகிதம் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது,
மேலும், 2022 ஆம் ஆண்டில், வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து 3,789 மில்லியன் அமெரிக்க டொலர்களை மட்டுமே நாடு பெற்றுள்ளதாகவும் இது 2021 இல் 5,491 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் 31 சதவீதம் குறைவு என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, 2022 இல் அதிக மாதாந்திரப் பணம் டிசம்பர் மாதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடான் குறித்த பணமானது அ 476 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் நவம்பர் 2022 இல், வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து 384 மில்லியன் அமெரிக்க டொலர்களை மட்டுமே நாடு பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.