
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 75 வது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சுற்றறிக்கைக்கு அமைவாக, பொத்தவில் பிரதேச செயலாளர் M.I. பிர்னாஸ் அவர்களின் வழிகாட்டலில், “75 இல் மாதிரி இளைஞர்கள்- பசுமையான நகரம்” எனும் தொனிப்பொருளில் பொத்துவில் நகரத்தின் மணிக்கூட்டு கோபுரம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளை சிரமதானம் செய்து, தீந்தை பூசி பூமரக்கன்றுகள் நட்டு அழகுபடுத்தும் நிகழ்வு நேற்று (03) திகதி பொத்துவில் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம், இளைஞர் கழக உறுப்பினர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் இளைஞர் சேவைகள் அதிகாரி ஆகியோரின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றது.