
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 622 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 588 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டதாகவும் சிறைத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், சிறைச்சாலைகளில் நல்லொழுக்கத்துடன் செயற்பட்ட மேலும் 31 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, போதைப்பொருள் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் கைதிகள் குழுவிற்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.