
பாணந்துறை, ஹோரதுடுவ பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகநூல் விருந்தொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் 34 பேரை கைது செய்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களில் 9 யுவதிகளும் உள்ளதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளதோடு இந்தச் சோதனையின் போது சந்தேகநபர்கள் வசம் இருந்த கஞ்சா போதைப்பொருள் மற்றும் மதுபானங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்தோடு, குறித்த சந்தேகநபர்கள் குழுவினரை பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் ஏனைய சந்தேக நபர்களின் பெற்றோரை அழைத்து வந்து பொலிஸ் பிணையில் விடுவிக்கவுள்ளதாகவும்பொலிஸார் தெரிவித்துள்ளனர்.