
எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்கப் போவதில்லை என உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும், கடந்த காலத்தில் பாண் மற்றும் ஏனைய உணவுப் பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளதால், இம்முறை உணவகங்களில் உணவு விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட மாட்டாது என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, எந்தவொரு உணவகத்திலும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டிருந்தால் அது தொடர்பில் உரிய திணைக்களங்களுக்கு அறிவிக்குமாறும் உணவக உரிமையாளர்கள் சங்கம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.