
மாளிகைக்காடு நிருபர்
மருதமுனையின் முதலாவது பள்ளிவாசலான மருதமுனை மஸ்ஜிதுன் நூர் ஜும்மாப்பள்ளிவாசலின் 99 ஆவது வருடாந்த புஹாரி ஹதீஸ் மஜ்லிஸ் இன்று (06.02.2023 ) திங்கட் கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டது.
மருதமுனை ஜம்மியதுல் உலமா மற்றும் அனைத்துப் பள்ளிவாசல்களின் சம்மேளனத் தலைவர் அஷ்ஷெய்க் எப். எம். அஹமதுல் அன்சார் மொளலானா (நழீமி) அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் பல முக்கியமான உலமாக்கள் கலந்து கொண்டு விசேட மார்க்க சொற்பொழிவுகளை நிகழ்த்தவுள்ளனர்.
நிகழ்வின் ஆரம்ப உரையினை மஸ்ஜிதுந் நூர் ஜும்ஆப்பள்ளிவாசல் தலைவர் எம்.ஐ.எம். முகர்ரப் நிகழ்தினார். செயலாளர் ஏ.ஏ.புழைல், பள்ளிவாசலின் முன்னாள் தலைவர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், மரைக்காயர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் இவ்வாரம்ப நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.