
ருஹுணு பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் பயிர் விஞ்ஞான சிரேஷ்ட பேராசிரியர் அருண குமார கூறுகையில், நோய் தாக்குதலால் பயிர் மஞ்சள் நிறத்தில் காணப்படுவதால், விவசாயத் திணைக்களம் கணக்கிட்டதை விட இந்த பருவத்தில் பயிர் சேதத்தின் அளவு அதிகமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நோய்களினால் இந்த பருவ நெல் விளைச்சலில் எதிர்பார்க்கப்படும் நெல் அறுவடையில் குறைந்தது 20 வீதமாவது சேதமடையலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, தண்டுகள் மஞ்சள் நிறமாக மாறுவதற்கு பொட்டாசியம் குறைபாடுதான் முதன்மைக் காரணம் என வேளாண்மைத் துறை வலியுறுத்துகின்றது.
எவ்வாறாயினும், பொட்டாசியம் உரங்களை இடுவதன் மூலம் நோயிலிருந்து விடுபட முடியாது என பேராசிரியர் அருண குமார சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, எதிர்வரும் பருவத்தில் பயிர்ச்செய்கை வெற்றியடையாவிட்டால் இவ்வருடமும் அரிசியை இறக்குமதி செய்ய நேரிடும் என பேராசிரியர் அருண குமார மேலும் தெரிவித்தார்.