
நாளை நடைபெறவுள்ள பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்வதில்லை என சமகி ஜனபலவேக தீர்மானித்துள்ளது.
மேலும், நாடாளுமன்ற அமர்வை முடித்துவிட்டு புதிய அமர்வை ஆரம்பிக்கும் தீர்மானத்தின் பின்னணியில் வேறு ஒரு நிகழ்ச்சி நிரல் இருப்பதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பாராளுமன்ற ஆயுட்காலம் முடிவடைந்தமையினால் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவும் கருத்து வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, புதிய பாராளுமன்றத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் சுதந்திர மக்கள் பேரவை பங்கேற்காது என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று தெரிவித்தார்.
மேலும், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது சபை நாளை காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதுடன் முற்பகல் 10 மணிக்கு அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.