
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அவசர விசேட மத்திய குழு கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
மேலும், அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய வரித் திருத்தங்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கவே இந்த அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்காவிட்டால் எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கலாநிதி சமில் விஜேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.