
அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக மின்சாரம், நீர், துறைமுகம், பெற்றோலியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு அமைய அவர்கள் தற்போது கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக உள்ள ஒல்கெட் மாவத்தையின் ஒரு பாதை தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, வரிக் கொள்கைக்கு எதிராக தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களுக்கு எதிராக கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், நிதியமைச்சு, ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகை மற்றும் காலிமுகத்திடல் மைதானத்திற்குள் பிரவேசிக்க முடியாத வகையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கோட்டை பொலிஸார் அறிவித்துள்ளனர்.