
இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம், நாட்டின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கான பட்டதாரி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.
மேலும், குறித்த நோக்கத்திற்காக, பொது சேவையில் எந்த பதவியிலும் பணிபுரியும் 40 வயதுக்குட்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கா,பொ,த உயர்தரத்திற்கான ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப வேண்டியதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தோடு, சம்பந்தப்பட்ட ஆட்சேர்ப்பின் பின்னரும் எஞ்சிய மற்றும் எழும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு மாகாண சபைகள் ஏனைய பட்டதாரிகளையும் சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கும் என டீமேலும் தெரிவித்துள்ளது.