
பொருளாதாரப் போரில் வெற்றி பெற்று நாட்டில் அபிவிருத்தியடைந்த பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு நாடுகளுக்கிடையிலான ஒற்றுமையும் ஐக்கியமும் முக்கியமானது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், 09 ஆவது பாராளுமன்றத்தின் 04 ஆவது அமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அத்தோடு, ஒற்றையாட்சி அரசில் அதிகாரத்தை அதிகபட்சமாகப் பகிர்ந்தளிப்பதாக தாம் நம்புவதாகவும், நாட்டைப் பிளவுபடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இதன்படி, கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளில் மாகாண சபைகளுக்கு உள்ள அதிகாரங்களை நடைமுறைப்படுத்த புதிய சட்டங்களை கொண்டு வர எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மாகாணங்களுக்கு ஏற்ப டி.ஐ.ஜி பிரிவுகளை எல்லை நிர்ணயம் செய்ய எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளதோடு நாட்டைப் பிரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.