
கினிகத்தேன, பெரகஹமுலவில் உள்ள வீடொன்றில் தாயும் மகளும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், கினிகத்தேன பெரகஹமுல பிரதேசத்தைச் சேர்ந்த கந்த வெதரலாலைச் சேர்ந்த மஹமதிலாவின் தாயார் பிரதீபா இந்திராணி (வயது 50) மற்றும் டொன் லக்மினி லக்மாலி (வயது 30) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
இதன்படி, பல நாட்களாக வீட்டில் வசிப்பவர்கள் வெளியே வராத நிலையில், வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பிரதேசவாசி ஒருவர் கினிகத்தேனை பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, படுக்கையறையில் உள்ள படுக்கையில் இரண்டு சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அத்தோடு, உயிரிழந்த இருவரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் உயிரிழந்த பெண்ணின் கணவரும் மகனும் கொழும்பு பிரதேசத்தில் பணிபுரிபவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இது தற்கொலை என சந்தேகிக்கப்படுவதோடு கினிகத்தேனை பொலிஸார் இரு சடலங்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.