
வரி மற்றும் வங்கிக் கடன் வட்டி அதிகரிப்புக்கு எதிராக இன்று முதல் 03 நாள் கறுப்புப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தபால் தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணி அனைத்து தபால் நிலையங்களையும் உள்ளடக்கியதாக இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக அதன் அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
வரி அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ஐக்கிய சுகாதார ஊழியர் சங்கமும் இன்று நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளிலும் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன் சுகாதாரத்துறை உட்பட பல துறைகளில் பல பிரச்சினைகள் காணப்படுவதாக ஐக்கிய சுகாதார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வணக்கத்திற்குரிய தம்பிட்டியே சுகதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
மேலும், அநீதியான வரி திருத்தங்களை நீக்குமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்த 24 மணித்தியால அடையாள வேலை நிறுத்தம் இன்று காலை 8 மணியுடன் நிறைவடைந்தது.