
கோடீஸ்வர வர்த்தகர் ரொஷான் வன்னிநாயக்க அண்மையில் பத்தரமுல்ல பெலவத்தையில் மூன்று மாடி வீடு ஒன்றில் வைத்து படுகொலை செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவரது தாயின் இரத்த மாதிரிகளுடன் ஒப்பிடப்பட்ட அறிவியல் சோதனையின் போது இது தொடர்பான அறிக்கை கடுவெல நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய வர்த்தகரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அத்தோடு, கடந்த ஜனவரி 30ஆம் திகதி முதல் காணாமல் போன தொழிலதிபரின் சடலம் அவரது ஆடம்பரமான மூன்று மாடி வீட்டின் மேல் தளத்தில் உள்ள குளியல் தொட்டியில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இதன்படி, ஒரு இலட்சம் ரூபா பணம் செலுத்தாத காரணத்தினால் சந்தேக நபர் குறித்த வர்த்தகரை கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட மரத்தடி மற்றும் வீட்டில் இருந்து பயன்படுத்தப்பட்ட கருத்தடை கேப்சூல் ஆகியவை அறிவியல் ஆதாரங்களுக்காக அரசாங்கத்தின் மரண விசாரணை அதிகாரிக்கு அனுப்பப்பட உள்ளன.