
பல கோரிக்கைகளை முன்வைத்து, நாளை (10) நள்ளிரவு முதல் சேவையை விட்டு விலகி தொழில் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக ரயில் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், இது குறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.டி.ஜெயசங்கர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தகுதிகளை பூர்த்தி செய்த அதிகாரிகளுக்கு இதுவரை பதவி உயர்வு வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவு , சில பயணிகள் போக்குவரத்து ரயில்களை ரத்து செய்தமை மற்றும் நியாயமற்ற வரி விதிப்பு ஆகியவற்றிற்கு எதிராக தமது சங்கம் எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.