
இலங்கையின் சனத்தொகையில் 35 வீதமானோர் உண்ணும் உணவின் அளவைக் குறைத்துள்ளதாக உலக உணவுத் திட்டத்தின் சமீபத்திய டிசம்பர் மாத ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் உள்ள 10க்கு 9 இலங்கை குடும்பங்களும், தோட்டங்களில் உள்ள 10க்கு 8 குடும்பங்களும் தமக்கு அன்றாடம் தேவையான உணவை கொள்வனவு செய்வதில் சிரமங்களை எதிர்கொள்வதாகவும், அந்த உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான இடங்கள் இன்மையே பிரதான காரணங்களாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
மேலும், இலங்கையில் உள்ள 10 குடும்பங்களில் 9 குடும்பங்கள் உணவுப் பொருட்களின் விலையால் கவலையடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, உதவி தேவைப்படும் குடும்பங்களில் 10 சதவீதத்தினரே டிசம்பர் மாதத்தில் அரசாங்கம், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உதவியைப் பெற்றதாக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், டிசம்பர் மாதத்தில் இலங்கை சனத்தொகையில் 43 வீதமானோர் உண்ணும் உணவின் அளவைக் குறைத்துள்ளதுடன், 67 வீதமானோர் தங்களுக்குப் பிடித்தமான உணவுகளை கைவிட்டு தமக்கு விருப்பமில்லாத உணவிற்கு மாறியுள்ளதாகவும்குறிப்பிட்டுள்ளது,
அத்தோடு, நவம்பருடன் ஒப்பிடும்போது உணவு அடிப்படையிலான பசி நிவாரண நடவடிக்கைகளை நாடுவோரின் எண்ணிக்கை 4 சதவீதம் குறைந்துள்ளதாகவும் அறிக்கை காட்டுவதக்கவும் தெரிவித்துள்ளது.
இதன்படைய, இலங்கைத் தோட்டக் குடும்பங்களில் 38 வீதமானவர்கள் உணவுப் பற்றாக்குறையினாலும், 34 வீதமான கிராமப்புறக் குடும்பங்களிலும், 28 வீதமான நகர்ப்புறக் குடும்பங்களிலும் உணவுப் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 37 வீதமான குடும்பங்கள் பெண் தலைமைத்துவக் குடும்பங்களாகவும், 32 வீதமான குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பின்மையினாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், அந்த அறிக்கையின்படி, இலங்கையில் ஊவா மாகாணம் டிசம்பரில் 43 வீதமான உணவுப் பாதுகாப்பற்ற தன்மையைக் கொண்டிருந்ததுடன், வட மாகாணத்தில் மிகக் குறைந்த உணவுப் பாதுகாப்பின்மை 25 வீதமாக இருந்ததுள்ளது.