
நல்லிணக்கத்தின் ஊடாக மாத்திரம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும் பொருளாதார அபிவிருத்தியின் வேகம் மக்களின் மனப்பான்மை மற்றும் அர்ப்பணிப்பிலேயே தங்கியுள்ளது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், வடமாகாண பிரச்சினைகள் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நேற்று (10) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அத்தோடு, யுத்தத்திற்கு முன்னர் வடமாகாணம் தேசிய பொருளாதாரத்திற்கு பரந்த பங்களிப்பை வழங்கியதாகவும், அந்த வலுவான பொருளாதாரத்தை வடக்கில் மீட்டெடுக்க தேவையான அபிவிருத்தி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
மேலும், வடமாகாண அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அறிஞர்கள் குழுவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.