
அரச வைத்தியசாலைகளில் அத்தியாவசிய சத்திரசிகிச்சைகளுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி விசேட வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைய ஏனைய சத்திரசிகிச்சைகளை முறையாக மேற்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
அத்தோடு, மருந்து தட்டுப்பாடு காரணமாக இந்த முடிவு எட்டப்பட்டதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளதோடு நாட்டில் பற்றாக்குறையாக காணப்படும் 75 வீதமான மருந்துகள் இன்னும் ஒரு மாதத்திற்குள் இந்த நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, மருந்துப் பொருட்கள் கையிருப்பு கிடைக்கும் வரை அத்தியாவசிய சத்திரசிகிச்சைகளுக்கு முன்னுரிமை வழங்கி ஏனைய சத்திரசிகிச்சைகள் முறையாக மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.