
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை வழங்குவதற்கு திறைசேரிக்கு முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான அச்சுப் பணிகளை பணம் செலுத்தாமல் மேற்கொள்ள முடியாது என அரச அச்சக அதிகாரி ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.