
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்திற்கு இந்த காலாண்டில் அங்கீகாரம் வழங்க அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், இல்லையேல் பொருளாதார ரீதியில் நாட்டை மீட்டெடுப்பது மிகவும் கடினமாகும் என இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் தெரிவித்தார்.