
பதுளை, விஹாரகொட பிரதேசத்தில் 145 போதை மாத்திரைகளுடன் வைத்தியர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
மேலும், இவர் பதுளை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் எனவும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்திற்குரிய வைத்தியர் பதுளை மைலகஸ்தன்னவில் உள்ள தனது தனியார் வைத்திய நிலையத்தில் நீண்டகாலமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், அவர் பயணித்த காரையும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.