
நிதி அமைச்சின செயலாளர் கே.எம். மஹிந்த சிறிவர்தனவை இன்று தேர்தல்கள் ஆணைக்குழு முன்னிலையில் அழைக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஆணைக்குழு கோரிய நிதி ஒதுக்கீட்டை வழங்காமை தொடர்பில் ஆலோசிக்க நிதி அமைச்சின் செயலாளரை அழைக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் எமக்கு தெரிவித்தார்.
இதன்படி, தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படும் என நம்புவதாக தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பை காலவரையறையின்றி ஒத்திவைக்க தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று தீர்மானித்துள்ளதாகவும் தபால் வாக்குச் சீட்டுகள் அச்சிடுவதற்குரிய பணம் கிடைக்காதமையே அதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தபால் வாக்குகள் விநியோகம் இன்று இடம்பெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்ததோடு உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு இம்மாதம் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடைபெறவிருந்தது குறிப்பிடதக்கதாகும்.