
மின்சார சபையின் கட்டண திருத்தம் அமுல்படுத்தப்பட்டதையடுத்து, தற்போதைய மின்வெட்டு இன்று முதல் நிறுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மேலும், மின்சார பாவனையாளர்களுக்கு தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட மின்சார சபையின் கட்டண திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மற்றும் அது தொடர்பான அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குமாறும், மத ஸ்தலங்கள் மற்றும் அரச கல்வி நிலையங்களுக்கு சூரிய மின் தகடுகளை வழங்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.