
இலங்கை பங்கேற்கும் இருபதுக்கு இருபது மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் மற்றுமொரு போட்டி இன்று ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியுடன் நடைபெறவுள்ளது.
மேலும், இவ்விரு அணிகளும் தாங்கள் பங்கேற்ற முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 4 போனஸ் புள்ளிகளைப் பெற்றுள்ளன. முதல் குழுவில் போட்டியிடும் நாடுகளில் ஆஸ்திரேலியா புள்ளிப்பட்டியலில் முன்னணியிலும். இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது.
இதன்படி, இலங்கை மகளிர் அணி, தென்னாபிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளை போட்டியின் முந்தைய ஆட்டங்களில் தோற்கடித்தது. இன்றைய போட்டியில் இலங்கை அணி அவுஸ்திரேலியாவை வீழ்த்தினால் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.