
மின் கட்டண திருத்தம் தொடர்பாக இதுவரை ஏற்றுக்கொள்ளக் கூடிய அனுமதி கிடைக்கவில்லை என மின் பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், மின்சார கட்டண திருத்தம் தொடர்பான உத்தியோகபூர்வ ஆவணம் கூட கிடைக்கப்பெறவில்லை என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இதுவரை கிடைத்துள்ள ஆவணத்தில் மின்சார சபைக்கு ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்ட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து குறிப்பிடப்படவில்லை என்ரம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், புதிய மின் கட்டண திருத்தம் இன்று முதல் அமுலுக்கு வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.