
நாளைக்குள் வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட்டால், தபால்மூல வாக்களிப்பை தடையின்றி திட்டமிட்ட திகதியில் நடத்த முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் அரசாங்க ஊடகவியலாளர் பணிபுரிவதால் பிரச்சினைக்குரிய சூழ்நிலைகள் உருவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளதோடு. தேர்தலை நடத்துவதற்கு இந்த சுற்றறிக்கை பொருந்தாது எனவும் தெரிவித்துள்ளார்.
இதன்படி, சம்பந்தப்பட்ட தரப்பினரைக் கொண்டு வந்து கலந்துரையாடிய போதிலும் அதற்கான பணத்தினை நிதி அமைச்சினால் வழங்கப்படவில்லை அல்லது தபால் மூல வாக்குகள் அரசாங்க அச்சகத்தினால் வழங்கப்படவில்லை எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
அத்தோடு, நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ளது.