
பதிவு செய்யப்படாத இரண்டு இந்திய நிறுவனங்களிடமிருந்து மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சபை எடுத்த தீர்மானத்தின் மூலம் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகத் தீர்ப்பளிக்கக் கோரி ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமைமீறல் மனுவொன்றை சமர்ப்பித்துள்ளது.
மேலும், மனுவில் பிரதிவாதிகளாக சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அத்தோடு, இந்திய கடன் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாத இரண்டு இந்திய நிறுவனங்களிடமிருந்து மருந்துகளை வாங்க சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக மனுதாரர் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.