
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எதிர்வரும் 22, 23, 24 மற்றும் 28ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த தபால் மூல வாக்குச் சீட்டுகளில் குறியிடும் நடவடிக்கைகள் அன்றைய தினங்களில் மேற்கொள்ளப்படாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.