அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது கடமைகளை வெற்றிகரமாக நிறைவேற்றும் அளவுக்கு ஆரோக்கியமாகவும், ஆற்றலுடனும் இருப்பதாக வெள்ளை மாளிகை மருத்துவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வொஷிங்டன் பகுதியில் உள்ள வைத்தியசாலையில் மூன்று மணித்தியால உடல் பரிசோதனைக்கு பின்னர் வைத்தியர் இதனை தெரிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு, 80 வயதான அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாட்டின் மிகவும் வயதான ஜனாதிபதி என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன
அவர் இரண்டாவது தடவையாக போட்டியிடப் போவதாகவும் விரைவில் அறிவிப்பார் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.