
ஜப்பானில் உள்ள வேலைகளுக்கு இலங்கையர்களை இலவசமாக இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஜப்பானிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், பயிற்சி பெற்ற தொழிலாளர்களை ஜப்பானுக்கு அனுப்புவதற்கான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று (17) கைச்சாத்திடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்படி, உரிய ஒப்பந்தத்தின் மூலம் அதிக திறன் வாய்ந்த பணியாளர்களை ஜப்பானுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட உள்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அத்தோடு, அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஜப்பானிய அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்றுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்
மேலும், எதிர்காலத்தில் பயிற்சி பெற்ற தொழிலாளர்களை மட்டுமே வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்பும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.