
நாட்டில் தற்போது விதிக்கப்பட்டுள்ள வரி அறவீடுகளுக்கு எதிராக எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த ஒன்றிய அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
மேலும், நீர் வழங்கல், மின்சாரம், துறைமுகம், கல்வி, விமான சேவைகள் உள்ளிட்ட பல துறைகளில் தொழிற்சங்கங்கள் இணைந்து இந்தப் போராட்டத்தினை ஏற்பாடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற.
அத்தோடு, எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ள போராட்டத்தின் பின்னர் பெறப்படும் தீர்மானங்களுக்கு அமைய எதிர்காலத்தில் தொழிற்சங்க வேலைநிறுத்தங்கள் அமுல்படுத்தப்படும் என ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் மேலும் தெரிவித்தார்.