
அரச துறையில் மேற்கொள்ளப்படும் முறைகேடுகள், மோசடிகள், ஊழல்கள் மற்றும் தவறான தீர்மானங்களினால் மக்கள் மீது அதிக மின்சாரக் கட்டணம் சுமத்தப்படுவதாக சமகி ஜனபலவேகவின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். கண்டியில் மக்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார்,
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்கள் மீது பல்வேறு வகையான வரிகளை சுமத்தி சாதாரண மக்களை பழிவாங்குவதாக அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஜே.வி.பியால் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதை வரலாறு நிரூபித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.