
இந்த ஆண்டு பசுமை நிதி திட்டங்களுக்கு நிதி திரட்டுவதற்கான வலுவான சாலை வரைபடத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்காக ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன தலைமையில் பசுமை நிதிக் குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும், இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பசுமை நிதி என்பது பொதுவாக காலநிலை மாற்றம் தொடர்பான சவால்களை சமாளிப்பதற்கும் குறைந்த கார்பன் பொருளாதாரத்தை நோக்கி நகர்வதற்கும்செயற்படும் ஏன் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கிரீன் ஃபைனான்ஸ் சாலை வரைபடம், பசுமை நிதி, பசுமைப் பத்திரங்கள், காலநிலை நிதி போன்ற அனைத்து செயல்முறைகளையும் ஒரே தளத்தில் குறிப்பிட்ட நோக்கங்கள் மற்றும் இலக்குகளுடன் ஒன்றிணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.