
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ தீர்மானம் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் தேர்தல் தொடர்பான ஆணைக்குழுவின் தீர்மானம் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
அறத்தொடு, உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எதிர்வரும் 22, 23, 24, 28ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த தபால் மூல வாக்குச் சீட்டுக்களுக்கான குறியிடல் அன்றைய தினங்களில் மேற்கொள்ளப்படாது எனவும்தபால் வாக்களிக்கும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும்தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்படி, தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியின் கீழ் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு பணம் வழங்குவது கடினம் என நிதி அமைச்சின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நேற்று அறிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தயாரா என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவாவிடம்ஊடகவியலாளர்கள் வினவியபோது, இது தொடர்பான உத்தியோகபூர்வ முடிவை தற்போது அறிவிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளதோடு அடுத்த வாரம் இது பற்றி அறிவிப்போம் என்றும் தெரிவிதத்தர்.
மேலும், தபால் வாக்குகளை குறிப்பது தொடர்பான ஆவணங்களை அரசு அச்சக அலுவலகம் தேர்தல் ஆணையத்திடம் குறிப்பிட்ட திகதிகளில் வழங்காததால் தபால் ஓட்டுகளை முறையாக நடத்த முடியவில்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.