
மார்ச் மாத இறுதி வரை மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியுடன் 15வது கப்பலும் இன்று புத்தளம் வந்தடைய உள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்தார்.
மேலும், ஆர்டர் செய்யப்பட்ட மற்ற கப்பல்கள்நாட்டிற்கு வந்த பிறகு, மே மாதம் வரை நாட்டில் போதுமான நிலக்கரி இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இலங்கையை வந்தடைந்த 13வது நிலக்கரி கப்பலின் தரையிறக்கம் நேற்று நிறைவடைந்ததோடு 14வது கப்பல் நிலக்கரியினை தரையிறக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக என இலங்கை நிலக்கரி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.