
கம்புருபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற பேரணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, இலங்கை மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க மக்கள் போராட்டம் நாளைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், மாளிகாவத்தை பிரதேசத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன கருத்துத் தெரிவிக்கையில்நாட்டுக்குத் தேவையான வெளிநாட்டுப் பணத்தைக் ஈட்டுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் எவரும் நேரடியாக தீர்மானங்களை எடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க அரசாங்கத்தை அமைத்து மோசடி மற்றும் ஊழலை நிறுத்தினால் மட்டும் போதாது ஊழல் மோசடி செய்தவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.