
வீரகட்டிய, ஹீன்புன்னவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், உயிரிழந்தவர் ஹீன்புன்ன பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடையவர் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்படி, காரில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளதாக மேலும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் வீரகட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.