
அண்மையில் நடைபெற்று முடிந்த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஜூன் மாத இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மேலும், கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்தோடு, உயர்தர விடைத்தாள் பரீட்சைக்கு கணிசமான எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் விண்ணப்பிக்காததால் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தினச் சம்பளம் போதுமானதாக இல்லாததே இதற்கு காரணம் எனவும் தற்போது ஆசிரியர்களுக்கு 500 ரூபா வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, கொடுப்பனவை 3000 ரூபாவாக அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சர் அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றுள்ள போதிலும், அது வாக்குறுதிகளுக்குள் மட்டுப்படுத்தப்படாமல் சுற்றறிக்கையாக வெளியிடப்பட வேண்டுமென ஆசிரியர் சங்கங்கள் தெரிவிப்பதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்மேலும் தெரிவித்தார்.