
தெமட்டகொட கலிபுல்ல தோட்டத்திலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதங்களுடன் வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், சந்தேக நபருடன் 13 வாள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, குறித்த வீட்டில் போதைப்பொருள் கடத்தல் இடம்பெறுவதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், குறித்த வீட்டைச் சோதனையிட்ட போது, சாண மூட்டையில் குறித்த வாள்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு, கைது செய்யப்பட்ட 53 வயதுடைய சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதோடு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.