
இந்திய கடன் உதவி முறை போன்ற சில விடயங்களை மாத்திரம் நம்பியிருப்பதன் காரணமாக மருந்து தட்டுப்பாட்டைத் தவிர்ப்பது சவாலாக மாறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி சமில் விஜேசிங்க தெரிவித்தார்
மேலும், இதன் விளைவாக, நாட்டில் சுகாதார அமைப்பைப் பராமரிப்பது மிகவும் கடினமாகிவிட்டதாகவும் வெறிநாய்க்கடி நோய்க்கான தடுப்பூசிகள் தட்டுப்பாடு தொடர்பிலும் கலாநிதி சமில் விஜேசிங்க கருத்து வெளியிட்டார்.
அத்தோடு, கிடைக்கக்கூடிய மருந்துகள் மற்றும் ஏனைய வளங்கள் இன்மையால் மக்கள் முடிந்தளவு தொற்று நோய்களில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.