
அரசாங்க நிதி தொடர்பான குழுவில் எதிர்க்கட்சியின் சுயேச்சை உறுப்பினர்களின் பிரதிநிதித்துவம் இன்மை தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் ஆட்சேபனை எழுந்துள்ளது.
மேலும், பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போதே மேற்படி குழுவிற்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியலை சபாநாயகர் சபையில் முன்வைத்தார்.
இதன்படி, அரசாங்கத்தின் நிதிக் குழுவின் தலைவர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் பெயரை முன்மொழிவதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
மேலும், பாராளுமன்ற உறுப்பினர்களான மொஹமட் முஸம்மில் மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் அரசாங்க நிதி தொடர்பான குழுவில் தமது குழுவை பிரதிநிதித்துவப்படுத்தாத உறுப்பினர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.