
ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பிரகாரம் தேசிய பாதுகாப்புச் சபையை நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் சட்டப்பூர்வமாக்குவதற்கு சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கு வரைவு தயாரிப்பாளருக்கு ஆலோசனை வழங்குவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
மேலும், ஜனவரி 12 அன்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, தேசிய பாதுகாப்பு சபையை அரசியலமைப்புடன் நிறுவ வேண்டியதன் அவசியத்தை பரிந்துரைத்துள்ளது.
அதன் பிரகாரம் ஜனாதிபதி மேற்படி பிரேரணையை அமைச்சர்கள் சபைக்கு சமர்ப்பித்துள்ளதோடு. இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.