
36,000 மெற்றிக் தொன் மண் உரம் அல்லது டீ.எஸ்.பி உரம் கொண்ட கப்பல் ஒன்று அடுத்த மாதம் 20 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்,ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் நிதியுதவியின் கீழ் இலங்கை விவசாயிகளுக்கு சேறு உரத்தை இலவசமாக வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, அனைத்து விவசாயிகளுக்கும் இம்முறை நெற்செய்கைக்கு தேவையான மண் உரத்தை முழுமையாக இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.