
நாட்டில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு முறையான திட்டம் வகுக்கப்பட வேண்டுமெனவும், தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ள பொருளாதார வேலைத்திட்டத்தினால் கடந்த சில மாதங்களாக இருந்த பொருளாதார நெருக்கடிகள் ஓரளவுக்கு குறைந்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பொருளாதாரம் சீர்குலைந்த நாட்டிற்கு ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியத்தைத் தவிர உலகில் வேறு எந்த நிறுவனமும் இல்லை எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு மாற்றுப் பிரேரணைகள் இருப்பின் அவற்றை சர்வதேச நாணய நிதியத்தில் சமர்ப்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கத் தயார் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்று (20) இடம்பெற்ற கண்டி மாவட்ட வர்த்தகர்கள் மற்றும் சட்டத்தரணிகளுடன் கலந்து கொண்ட சந்திப்பின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.